சீனியின் விலை குறைகிறது

🕔 June 17, 2017
சீனிக்கான மொத்த விற்பனை குறைக்கப்பட்டுள்ளதாக சீனி இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், ஒரு கிலோகிராம் சீனியின் விலை 99 ரூபாவிலிருந்து 96 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த விலைக்குறைப்பு இன்று முதல் அமுலுக்கு வரும் என்று சீனி இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலக சந்தையில் சீனியின் விலை குறைவடைந்ததன் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சீனிக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்