தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கான மருத்துவ செலவு 14 கோடி ரூபாய்; கட்சி பொறுப்பேற்றது

🕔 June 16, 2017

ந்தியா – தமிழகத்தின் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அப்பலோ மருத்துவ மனையில் வழங்கப்பட்ட சிகிச்சைக்கான கட்டணம் இந்திய மதிப்பில் 06 கோடி ரூபாய் (இலங்கை நாணயப் பெறுமதியில் சுமார் 14 கோடியே 25 லட்சம் ரூபாய்) எனத் தெரிவிக்கப்படுகிறது.

சுகயீனம் காரணமாக கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சென்னையிலுள்ள அப்பலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு தொடர்ச்சியாக 72 நாட்கள் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், டிசம்பர் 05 ஆம் திகதி, ஜயலலிதா உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில், குறித்த 72 நாட்களும் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைக்கான மருத்துவ கட்டணம் இந்திய மதிப்பில் 06 கோடி ரூபாய் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி தொகையினை, அ.தி.மு.க.வின் அம்மா அணி ஏற்றுள்ளதாக, அந்த அணியின் செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

இதற்கிணங்க, குறித்த தொகைக்கான காலோலையினை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ஒப்படைத்துள்ளதாகவும். அவர், விரைவில் அந்த காசோலையை அப்பலோ மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைப்பார் எனவும் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

Comments