பள்ளிவாசலுக்கு பெற்றோல் குண்டு வீசிய விவகாரம்; பொதுபல சேனா அங்கத்தவர்கள் இருவர் கைது

🕔 June 15, 2017

குருநாகல் மல்லவபிட்டிய பள்ளிவாசலுக்கு பெற்றோல் குண்டு வீசி, தாக்குதல் நடத்தியவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் இருவர், இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

கடந்த மே மாதம் 21 ஆம் திகதி அதிகாலை 3.30 மணியளவில் மேற்படி பள்ளிவாசல் மீது 03 பேற்றோல் குண்டுகள் வீசிப்பட்டன.

தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் பொதுபல சேனா அமைப்பின் அங்கத்தவர்கள் என, விசாரணைகளிலிருந்து தெரிய வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

குருநாகல் பொலிஸ் புலனாய்வு பிரிவினர், மேற்படி சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் நான்கு பேர், பிரதேசத்தை விட்டும் தப்பியோடி விட்டதாகவும், அவர்களை கைது செய்யும் வகையில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோது, அவர்களை இம்மாதம் 19ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, நீதிமன்றம் உத்தரவிட்டது.

தொடர்பான செய்தி: குருணாகல் மல்லவபிட்டிய பள்ளிவாசல் மீது, பெற்றோல் குண்டு தாக்குதல்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்