ஜெமீல் தலைமையில் இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கி வைப்பு; அமைச்சர் றிசாத் பிரதம அதிதி

🕔 June 11, 2017

– எம்.வை. அமீர் –

பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகளை இலவசமாக வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் தலைவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கலாநிதி ஏ.எம். ஜெமீலின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பயனாளர்களுக்கு பெறுமதிவாய்ந் வாய்ந்த கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டன.

அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் சமூக அபிவிருத்தித் திட்டத்தின் மேற்படி மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டன.

இன்றைய நிகழ்வுவரை  500 க்கு மேற்பட்டவர்களுடைய கண்கள் பரிசோதிக்கப்பட்டு இன்று 220 பேருக்கு மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன.

இரண்டொரு தினங்களில் இன்னும் பலருக்கும், மூக்குக் கண்ணாடிகள் வழங்கி வைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந் நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான றிஷாத் பதியூதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு மூக்குக்கண்ணாடிகளை வழங்கி வைத்தார்.

நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி, லக்சல நிறுவனத்தின் தலைவரும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தருமான கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரும் அரசியல் ஆய்வாளருமான பேராசிரியர் எம்.எல்.ஏ. காதர், சட்டம் ஒழுங்குகள் அமைச்சின் மேலதிக செயலாளரும் சாய்ந்தமருதின் முன்னாள் பிரதேச செயலாளருமான ஏ.எல்.எம். சலீம், அரச வர்த்தக கூட்டுத்தாபன தலைவரின் இணைப்பாளர் ஏ.எல். ஜஹான்  மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சாய்ந்தமருது மத்தியகுழுவின் தலைவர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்