அமைச்சர் கபீர் ஹாசிம் ராஜிநாமா செய்கிறார்

🕔 June 11, 2017

ரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம், தனது அமைச்சுப் பதவியை ராஜிநாமாச் செய்யவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றம் தொடர்பில் அமைச்சர் கபீர் ஹாசிம் அதிருப்தியுள்ளார் எனத் தெரியவருகிறது. அமைச்சரின் கீழ் இருந்து வந்த பல நிறுவனங்கள், அமைச்சரவை மாற்றத்தின் பின்னர், வேறு அமைச்சர்களின் கீழ் மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதனாலேயே அமைச்சர் கபீர் ஹாசிம் அதிருப்தியுற்ற நிலையில், தனது அமைச்சுப் பதவியை ராஜிநாமாச் செய்யவுள்ளார் எனக் கூறப்படுகிறது.

அமைச்சரவை மாற்றம் இடம்பெற்ற பின்னர் வெளிநாடு சென்றுள்ள அமைச்சர் கபீர் ஹாசிம், நாளை திங்கட்கிழமை நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்