தனது குடும்பத்தினர் மீதான விசாரணைகளை நிறுத்தும் பொருட்டு, ஐ.தே.க. அமைச்சர்களுடன் பேச, மஹிந்த முயற்சி

🕔 June 11, 2017

னது குடும்பத்தினர் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளை இடைநிறுத்தி வைப்பதற்கான முயற்சியொன்றினை, முன்னாள் ஜனாபதிபதி மஹிந்த மேற்கொண்டு வருவதாக அறிய முடிகிறது.

இதற்காக, ஐக்கிய தேசிய கட்சியின் உயர் மட்ட அமைச்சர்களுடன் பேச்சு நடத்துவதற்கு மஹிந்த ராஜபக்ஷ முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஐ.தே.கட்சியின் ஆட்சிக் காலத்தில், விமான மற்றும் விமான சேவைகள் அதிகாரசபையின் தலைவராகப் பதவி வகித்த காமினி அபேரத்னவின் ஊடாக, மேற்படி பேச்சுவார்த்தையினை நடத்துவதற்கு, மஹிந்த ராஜபக்ஷ முயன்று வருவதாகவும் அறிய முடிகிறது.

தனது குடும்பத்தவர்கள் மீது, பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு மேற்கொண்டு வரும் விசாரணைகளை நிறுத்துவதற்கே, மஹிந்த ராஜபக்ஷ முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மஹிந்த ராஜபக்ஷ மீதும், அவரின் மனைவி, மகன்மார், மற்றும் சகோதரர்களான பசில், கோட்டா உள்ளிட்ட பலர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ், விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்