மஹிந்த – சுதந்திர கட்சி முக்கியஸ்தர்கள், ஜப்பானில் ரகசிய பேச்சுவார்த்தை

🕔 June 11, 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலருக்குமிடையில் ரகசிய பேச்சுவார்த்தையொன்று ஜப்பானில் இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது.

தேசிய அரசாங்கத்தை நீடிக்கும் பொருட்டு, சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்குமிடையில் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நிறைவடையும் நிலையில், அதனை நீடிப்பதற்கான ஒப்பந்தம் இரண்டு கட்சிகளுக்குமிடையில் செய்து கொள்ளப்படவுள்ளதாக அறியமுடிகிறது.

இந்த நிலையில், அந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னர் சுந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள் பலரின் ஆதரவினைப் பெற்றுக் கொள்வதற்கான பெரும் முன்னெடுப்பொன்றில், மஹிந்த ஈடுபட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.

மஹிந்த ராஜபக்ஷவின் ஒன்றிணைந்த எதிரணியை பலப்படுத்தும் வகையில், அரசாங்கத்துடன் அதிருப்தி கொண்டுள்ள சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களின் ஆதரவினை பெற்றுக் கொள்வதற்கு மஹிந்த ராஜபக்ஷ, பெரும் ஆர்வத்துடன் உள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹிந்த ராஜபக்ஷ தனது குழுவுடன், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஜப்பான் சென்றிருந்தமை நினைவு கொள்ளத்தக்கது.

Comments