மருதானையில் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான வியாபார நிலையம் எரிந்தது; நள்ளிரவில் சம்பவம்

🕔 June 8, 2017

கொழும்பு – மருதானை, மாளிகாகந்த வீதியிலுள்ள வியாபார நிலையமொன்று  நள்ளிரவு 12.30 மணியளவில் தீயினால் எரிந்துள்ளது.

முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான ‘த பேக்கரி கோர்ணர்’ எனும் வியாபார நிலையமே இவ்வாறு எரிந்துள்ளது.

எவ்வாறாயினும், இது திட்டமிட்ட நாசகார செயலாக இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.

குறித்த வியாபார நிலையத்தின் பின் பகுதி வழியாக நாசகாரிகள் தீ வைத்திருக்கலாம் என கூறப்படுகிறது.

மேற்படி வியாபார நிலையம் கடந்த ஒரு வாரமாக மூடப்பட்டிருந்த நிலையிலேயே, இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

குறித்த இடத்துக்கு வருகை தந்த தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சம்பவத்துக்கு முன்னதாக, இந்தப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான இளைஞர்கள் மூன்று பேர் நடமாடியதாகவும் கூறப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்