கட்டார் றியாலுக்கு இலங்கையில் தடை; செய்தியை மறுக்கிறது மத்திய வங்கி

🕔 June 6, 2017

ட்டார் ரியாலை, இலங்கை ரூபாவுக்கு மாற்றுவதற்கு, இலங்கை மத்திய வங்கி தடை விதித்துள்ளதாகக் கூறப்படும் செய்தியை மத்திய வங்கி மறுத்துள்ளது.

கட்டார் நாட்டுடன் சஊதி அரேபியா உள்ளிட்ட 04 அரபு நாடுகள், தமது உறவுகளைத் துண்டித்துக் கொண்டதாக நேற்று திங்கட்கிழமை அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து வளைகுடாவில் பதற்றம் உருவாகி வருகிறது.

மேலும், கட்டார் தனிமைப்படுத்தப்படும் அபாயம் உள்ளதாகவும், அவதானிகள் கூறுகின்றனர்.

இதேவேளை, கட்டாரில் வேலை வாய்ப்புக்காக சென்றுள்ளவர்களின் தொழில் மற்றும் வருமானம் என்பவை தொடர்பிலும், கேள்விகள் எழுந்துள்ளன.

இவ்வாறானதொரு நிலையிலேயே, கட்டார் றியால் குறித்து இலங்கையில் மேற்படி வதந்தி பரப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்