ஜப்பான் பேரரசர், மஹிந்தவை அழைக்கவில்லை; மூக்கை உடைத்தது இலங்கைக்கான தூதரகம்

🕔 June 3, 2017

ப்பான் பேரரசரின் அழைப்பின் பேரில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்நாட்டிற்கு விஜயம் செய்துள்ளார் என தெரிவிக்கப்படும் நிலையில், மஹிந்தவுக்கு ஜப்பான் பேரரசர் அவ்வாறு எவ்வித அழைப்பினையும் விடுக்கப்படவில்லை என்று இலங்கைக்கான ஜப்பான் தூதரகமும் வெளிவிவகார அமைச்சும் தெரிவித்துள்ளன.

மஹிந்தவுடன், அவருடைய மகன் யோஷித ராஜபக்ஷ உட்பட 09 பேர் அடங்கிய குழு, கடந்த புதன்கிழமை இரவு ஜப்பான் நோக்கி பயணமாகியிருந்தது. இந்த நிலையில், ஜப்பான் பேரரசரின் அழைப்புக்கிணங்கவே, மஹிந்த அங்கு செல்வதாக கூறப்பட்டது. ஆயினும்,  ஜப்பான் அரசாங்கமோ, பேரரசரரசரோ மஹிந்தவுக்கு அவ்வாறான அழைப்புகள் எதனையும் விடுத்திருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது;

ஜப்பானின் வகாயாமா – கோயாவில் அமைந்துள்ள பௌத்த ஆலயமொன்றில் நடைபெறும் நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காகவே மஹிந்த அங்கு சென்றுள்ளார் என்று வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜப்பான் – இலங்கை பௌத்த அமைப்பினாலேயே இவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகவும் அமைச்சின் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.

மஹிந்த உள்ளிட்ட குழுவினர்மேற்படி பயணத்தை முடித்துக் கொண்டு,  எதிர்வரும் 10ஆம் திகதி இலங்கைக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்பான செய்தி: ஜப்பானுக்கு மஹிந்த விஜயம்; மகன் யோசிதவும் உடன் செல்கிறார்

Comments