அனர்த்தத்தில் பலியானோர் தொகை 208ஆக அதிகரிப்பு

🕔 June 2, 2017

யற்கை  அனர்த்தம் காரணமாக நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 208 வரை அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அதேவேளை 92 பேர் வரை காணாமல் போயுள்ளதாக அந்த நிலையம் கூறியுள்ளது.

மேலும் 72 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், 75  ஆயிரத்து 516 குடும்பங்களைச் சேர்ந்த 06 லட்சத்து 77 ஆயிரத்து 241 பேர் வௌ்ளம் மற்றும் மண் சரிவு அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

Comments