மூதூர் மாணவியர் துஷ்பிரயோக வழக்கு; திங்கட்கிழமை அடையாள அணிவகுப்பு

🕔 May 31, 2017

திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் மாணவிகள் மூவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக் கூறப்படும் சம்பத்துடன் தொடர்புடைய ஐந்து சந்தேகநபர்களும் இன்று புதன்கிழமை மூதூர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

ஏற்கனவே நான்கு சந்தேக நபர்கள் கைது செய்ய்பட்ட நிலையில், நேற்றைய தினம் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

மூன்று மாணவியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்தாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு, மூதூர் நீதவான் நீதிமன்ற நீதிபதி முகம்மட் றிஸ்வான் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகள் மூவரும் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமையினால், குறித்த வழக்கை எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பதாக நீதவான் இதன்போது தெரிவித்தார்.

மேலும், அன்றைய தினம் சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்கான அடையாள அணிவகுப்பும் இடம்பெறும் என்றும் நீதவான் அறிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்