புதிய அமைச்சர்கள் 09 பேர் சத்தியப் பிரமாணம்; தமிழர், முஸ்லிம் எவருமில்லை

🕔 May 22, 2017

மைச்சரவை மாற்றம் இடம்பெற்றமையினை அடுத்து, இன்று திங்கட்கிழமை 09 பேர் அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். இவர்களில் எவரும் தமிழர் மற்றும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் புதிய அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டோர் விபரம் வருமாறு;

  1. மங்கள சமரவீர – நிதி மற்றும் ஊடகத்துறை
  2. எஸ்.பி. திஸாநாயக்க – சமூகமேம்பாடு, நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமை
  3. டப்ளியு.டி.ஜே. செனவிரத்ன – தொழிலாளர், தொழிற்சங்க உறவுகள் மற்றும் சப்ரகமுவ அபிவிருத்தி
  4. ரவி கருணாநாயக்க – வெளிவிவகாரம்
  5. மஹிந்த சமரசிங்க – துறைமுகம் மற்றும் கப்பல்துறை
  6. கயந்த கருணாதிலக்க – காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு
  7. அர்ஜுன ரணதுங்க – பெற்றோலிய வளத்துறை அபிவிருத்தி அமைச்சர்
  8. சந்திம வீரக்கொடி – திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி
  9. திலக் மாரப்பன – அபிவிருத்தி பணிகள்
  10. மஹிந்த அமரவீர – மகாவலி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர்

இன்று ராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த அமரவீர, ஏற்கனவே மீன்பிடி, நீரியல்வள அபிவிருத்தி அமைச்சராகப் பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்