மன்னார் மாவட்டத்தில் மீள்குடியேறிய மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க விசேட குழு

🕔 May 17, 2017

ன்னார் மாவட்டத்தில் போரால் இடம்பெயர்ந்தோர் மற்றும் அப் பிரதேசத்தில் மீளக் குடியேற்றப்பட்டுள்ளோரின் பிரச்சினைகளைத் தீர்பதற்காக, ஜனாதிபதியின் ஆலோசனைக்கு இணங்க, விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் போரால் இடம்பெயர்ந்தோர் மற்றும் அப் பிரதேசத்தில் மீளக் குடியேற்றப்பட்டுள்ளோரின் பிரச்சினைகளைஆராய்வதற்கான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி செயலாளர் பி.பீ.அபேகோன் தலைமையில் நேற்று செவ்வாய்கிழமை  ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போதே, சம்பந்தப்பட்டவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு விசேட குழுவொன்றினை நியமிப்பதென தீர்மானிக்கப்பட்டது.

முஸ்லிம் பிரதிநிதிகள் மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் மற்றும் வன பாதுகாவல் திணைக்கள அலுவலர்களும் இக் கலந்துரையாடலில் கலந்த கொண்டனர்.

மேற்படி பிரதேச மக்கள் முகம் கொடுத்து வரும் பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது என்பது தொடர்பில், இதன்போது விரிவாக கலந்தரையாடப்பட்டது.

குறித்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய விசேட குழுவொன்றை நியமிப்பதெனவும் அந்தக் குழுவினரின் அறிக்கை ஒரு மாத காலத்தினுள் சமர்ப்பிக்கப்பட வேண்டுமெனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

Comments