பொலிஸாருக்கிடையில் அடிபிடி; மேலதிகாரியை உத்தியோகத்தர் தாக்கியதாக முறைப்பாடு

🕔 May 15, 2017

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், தன்னைத் தாக்கியதாக அதே இடத்தில் பணியாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.

வேலையின் நிமித்தம் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே, இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

யாழ்ப்பாணத்திலுள்ள விருந்தினர் விடுயின் மதுபானம் அருந்துமிடத்தில் மேற்படி இருவரும் தற்செயலாக சந்தித்த போது, அவர்களுக்குள் ஏற்பட்ட தர்க்கம் காரணமாக, பொலிஸ் பரிசோதகரை, சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்போது தலையிட்ட விருந்தினர் விடுதியின் முகாமையாளர், சண்டையைத் தடுத்து, இருவரையும் பொலிஸ் நிலையம் அனுப்பி வைத்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக பொலிஸ் பரிசோதகர் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்