முன்னாள் சபாநாயகர் பாக்கீர் மாகாரின் நூறாவது பிறந்த தினத்தையொட்டி நிகழ்வுகள்

🕔 May 10, 2017

 

– அஷ்ரப் ஏ சமத், எம்.எஸ்.எம். ஸாகிர் –

முன்னாள் சபாநாயகரும் ஆளுநருமான தேசமான்ய எம்.ஏ. பாக்கீர் மாகாரின் நூறாவது பிறந்த தினம் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை இடம்பெறுகின்றது.

1917 மே மாதம் 12 ஆம் திகதி பிறந்த பாக்கீர் மாகார், 1997 செப்டம்பர் 10 ஆம் திகதி காலமானார்.

இவரது பிறந்த தினத்தை முன்னிட்டு இலங்கை ஒலிப்பரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் சக்தி தொலைக்காட்சியில் நினைவுதின உரைகள் இடம்பெறுகின்றன.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தில் நாளை வியாழக்கிழமை 11ஆம் திகதி  முஸ்லீம் சேவையில் இரவு 08.05க்கு ராஜாங்க அமைச்சா் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்,  தமிழ்ச் சேவையில் இரவு 07.30 மணிக்கு பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் உறுப்பினர் எஸ். தில்லைநாதன், ஆங்கில சேவையில் இரவு 07.00 மணிக்கு   கொழும்பு சாஹிராக் கல்லுாாியின் முன்னாள் அதிபர் சட்டத்தரணி ஜாவித் யுசுப், சிங்கள சேவையில் பி.ப. 01.30 மணிக்கு  அமைச்சா் மத்தும பண்டா ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.

சக்தி தொலைக்காட்சியில் நாளை வியாழன் இரவு  10-30க்கு  தென்கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியா் ஹூசைன் இஸ்மாயில் மற்றும்  நவமணி பிரதம ஆசிரியா் என்.எம். அமீன்  ஆகியோர்  உரையாற்றுவார்கள். இந் நிகழ்ச்சியை றியாஸ் ஹாரிஸ் தயாரிக்கின்றார். 

அதேவைளை, பாக்கீா் மாா்கார் ஸ்தாபித்த அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணியினால், ஸ்தாபகா் தினம்  எதிா்வரும் மே 15ஆம் திகதி பி.பகல் 04.30 மணிக்கு கொழும்பு தாபலக கேட்போா் கூடத்தில் நடைபெறும். இந்நிகழ்வில்  அரசியலமைப்பு மாற்றத்தில்  நாம் எதிா்நோக்கும் சவால்கள் என்ற தலைப்பில் அமைச்சா் லக்ஷ்மன் கிரியல்ல மற்றும்  ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் விமல் ரத்னாயக்க ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்