கீதாவின் காலியான ஆசனம் தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நடவடிக்கை

🕔 May 9, 2017

கீதா குமாரசிங்கவின் காலியான நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கீதாவின் நாடளுமன்ற உறுப்பினர் ஆசனம், காலியாகிவிட்டதாக, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்துள்ளதையடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

கீதா குமாரசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதற்குத் தகுதியற்றவர் என, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்தே, உறுப்பினர் ஆசனம், காலியாகிவிட்டதாக நாடாளுமன்ற செயலாளர் அறிவித்திருந்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகக் கூறினார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின், காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக கீதா குமாரசிங்க பதவி வகித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்