அமைச்சுப் பதவியைக் காப்பாற்ற, அன்பளிப்பாகக் கொடுத்த கார்கள்: ஒவ்வொன்றும் மூன்றரைக் கோடி ரூபாய்; படங்களும் அம்பலம்

🕔 May 2, 2017

சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தனது அமைச்சுப் பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, நாட்டிலுள்ள முக்கிய சமயத் தலைவர்கள் சிலருக்கு கார்களை அன்பளிப்பாக வழங்கியிருந்தார் எனும் செய்தி அண்மையில் வெளியாகி இருந்தன.

தற்போது, அவ்வாறு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்ட கார்கள் இரண்டின் படங்கள் வெளியாகியுள்ளன.

குறித்த அமைச்சர் மொத்தமாக 05 கார்களை அன்பளிப்பாக வழங்கியதாகத் தெரியவருகிறது. இந்தக் கார்கள் புதிய ரக வோல்வோ கார்கள் எனவும், இவை ஒவ்வொன்றும் மூன்றரைக் கோடி ரூபாய்  பெறுமதியானவை என்றும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் மல்வத்து மகாநாயக தேரர், தனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட காரினை நிராகரித்து விட்டதாக அறிய முடிகிறது.

குறித்த அமைச்சர் தனது அமைச்சுப் பதவியினைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும், தனது முதலீட்டுத் திட்டமொன்று வெற்றி பெறுவதற்காக, ஆசிர்வாதத்தினைப் பெற்றுக் கொள்றும் பொருட்டுமே, இவ்வாறு மதத் தலைவர்களுக்கு அன்பளிப்புகள் வழங்கியதாகத் தெரிய வருகிறது.

இந்த அமைச்சர் தெற்கைச் சேந்தரவர் என்றும், மிக முக்கியமான அமைச்சினை தன்வசம் வைத்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.

இதேவேளை, அமைச்சரவை மாற்றத்தின் போது – தன்னிடமுள்ள அமைச்சுப் பதவியை எடுத்தால், நாடாளுமன்றின் கடைசி ஆசனத்தில் தான் அமவுள்ளதாகவும், வேறு அமைச்சுப் பதவிகள் எவற்றினையும் தான் பொறுப்பேற்கப் போவதில்லை என்றும் கூறி, மேற்படி அமைச்சர் தனது கட்சித் தலைவர்களை அச்சுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அமைச்சர் அன்பளிப்பாக வழங்கிய கார்கள், அமைச்சு நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டதாகத் தெரியவருகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்