தந்தைக்காக அமைச்சுப் பதவியை தூக்கியெறிந்தார் பிரமித பண்டார தென்னகோன்

🕔 April 25, 2017

த்திய மாகாண அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், தனது அமைச்சுப் பதவியை இன்று செவ்வாய்கிழமை ராஜிநாமா செய்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தம்புள்ள தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து தனது தந்தை ஜனக பண்டார தென்னகோன் நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இவர் தனது அமைச்சுப் பதவியினை ராஜிநாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மத்திய மாகாண சபைத் தேர்தலில் ஐ.ம.சு.முன்னணி சார்பில் மாத்தளை மாவட்டத்தில் போட்டியிட்ட பிரமித பண்டார தென்னகோன், 51,591 எனும் அதி கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்