ராஜிவ் கொலைக்குற்றவாளி முருகன்; காவியணிந்து, துறவியின் தோற்றத்தில் நீதிமன்றில் ஆஜர்

🕔 April 21, 2017

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள முருகன், நேற்று வியாழக்கிழமை வேலூர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டபோது, இந்து துறவிகள் போன்ற தோற்றத்தில், காவியுடை அணிந்து காணப்பட்டமை தொடர்பில், ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை கொலை செய்த குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன் தற்போது, வேலூர் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளார்.

முருகனிடமிருந்து அண்மையில் கைத்தொலைபேசி மற்றும் சிம் அட்டைகள் கைப்பற்றப்பட்டிருந்தன. இது குறித்த வழக்கு விசாரணை நேற்று வேலூர் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.

இதன் போது பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அழைத்து வரப்பட்ட முருகன், நீதிபதியுடன் மாத்திரம் ஓரிரு வார்த்தைகளை பேசியினார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

நீதிமன்றுக்கு வருகை அழைத்து வரப்பட்ட முருகன், காவி உடையணிந்து நீண்ட தாடியுடனும் மற்றும் குடுமியுடன் காணப்பட்டார்.

முருகனிடமிருந்து கைத் தொலைபேசி மற்றும் சிம் அட்டைகள் கைப்பற்றப்பட்டமையினை அடுத்து,  பார்வையாளர்களை சந்திக்க அவருக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் முருகனின் மனைவியும் ராஜிவ் காந்தி கொலைக் வழக்கில் தண்டனை பெற்று வருபவருமான நளினி மற்றும் தாயார் உள்ளிட்டவர்களுக்கும் முருகனைப் பார்வையிட தடைவிதிக்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்