மீத்தொட்டமுல்ல குப்பை மேடு சரிந்ததில் 40 வீடுகள் சேதம், 06 பேர் பாதிப்பு

🕔 April 14, 2017

கொலன்னாவ, மீத்தொட்டமுல்ல பிரதேசத்தில் உள்ள குப்பை மேடு சரிந்ததில், அருகிலிருந்த 40 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில், 06 பேர் காயமடைந்த நிிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை குப்பை மேட்டின் மேல் பகுதியில் தீப்பற்றி அதனுள் பெகோ இயந்திரம் ஒன்று சிக்கியது. இதனையடுத்து விமானப்படையின் பெல் 212 வகை ஹெலிகப்டர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்திருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்