புதிய அரசியல் யாப்பில், மரண தண்டனையை நீக்க பரிந்துரைப்பு

🕔 April 7, 2017

த்தேச அரசியல் யாப்பின் மூலமாக மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என, பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு சபையிலுள்ள அடிப்படை உரிமைகள் தொடர்பான உபகுழு இந்த பரிந்துரையினை செய்துள்ளது.

இலங்கை பிரஜைகளுக்கு, எந்தவொரு குற்றத்துக்காகவும் மரண தண்டனை விதிக்கப்படக் கூடாது எனும் சட்டம், உத்தேச அரசியல் யாப்பில் உள்வாங்கப்பட வேண்டும் என, அரசியலமைப்பு சபையிலுள்ள அடிப்படை உரிமைகள் தொடர்பான உபகுழு தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது.

அரசியலமைப்பில், நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளும் சுதந்திரமும் என்ற பிரதான பகுதியில் இந்த சட்டம் உள்வாங்கப்பட வேண்டும் எனவும் அச்சபையின் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சகல பிரஜைகளுக்கும் உயிர்வாழ்தல், கௌரவம், சமத்துவம், சுதந்திரம் மற்றும் உயிருக்கான பாதுகாப்பு என்பன இருத்தல் வேண்டும் என்பதனால், மரண தண்டனை நீக்கப்படல் வேண்டும் என,  மேற்படி உப குழு பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்