மதத் தலை­வர்கள் அடிப்­படை உரி­மை­களைத் தடுக்க முயல்கின்றனர்: றிஸ்வி முப்தியின் கருத்துக்கு, பெண்கள் அமைப்பு கண்டனம்

🕔 April 3, 2017

‘முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­ட­மா­னது, அதன் தற்­போ­தைய நிலையில் சிறப்பாகவே எழு­தப்­பட்­டுள்­ளது, அதில் மாற்­றங்கள் தேவையில்லை.’ என்று, அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி தெரிவித்துள்ளமை­யா­னது விச­ன­த்தினையும், ஏமாற்­றத்தினையும் ஏற்படுத்துவதாக வடக்கு கிழக்கில் செயற்படும் 08 பெண்கள் அமைப்­பு­க­ளின் கூட்டமைப்பான, பெண்கள் செயற்­பாட்டு வலை­ய­மைப்பு  வெளி­யிட்­டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்­டுள்­ளது.

நேர்காணல் ஒன்றின் போது, றிஸ்வி முப்தி மேற்படி கருத்தினை வெளியிட்டிருந்ததாவும், அந்த அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது;

மதத் தலை­வர்கள் சம்­பி­ர­தா­யங்­களை முன்­னி­றுத்தி அடிப்­படை உரி­மை­களைத் தடுக்க முயல்கின்றனர். இந்­நி­லையில் முஸ்லிம் பெண்­களும், குழந்­தை­களும் தமது உரிமை தொடர்பில் இலங்­கையில் இரண்டாந் தரக் குடி­மக்கள் இல்லை என்­பதை அரசு உறுதிப்­ப­டுத்த வேண்டும்.

நீதி­பதி சலீம் மர்­சூப் தலை­மையில் முஸ்லிம் தனியார் சட்­டத்­தினைச் சீர்­தி­ருத்­து­வ­தற்காக 2009 ஆம் ஆண்டில் அப்­போ­தைய நீதி­ய­மைச்­சரால் அமைக்­கப்­பட்ட குழுவில், ரிஸ்வி முப்­தியும், உலமா சபையின் இன்­னொரு மூத்த உறுப்­பி­னரும் அங்கத்தவர்களாக இருந்தனர். உலமா சபை­யா­னது, இக் குழுவின் அங்­கத்­த­வ­ரென்ற வகையில், கடந்த எட்டு வரு­டங்­க­ளாக, முஸ்லிம் தனியார் சட்­டத்­தினுள் சீர்திருத்தங்களைக் கொண்­டு­வ­ரு­வது தொடர்­பாக நிகழ்ந்த கலந்­து­ரை­யா­டல்­களிற் பங்­கேற்­றுள்­ளது.

இந்த நிலையில் றிஸ்வி முப்­தியின் இக் கூற்­று­க­ளா­னது, முஸ்லிம் தனியார் சட்டத்தினுள் நிலை­யான சட்டச் சீர்­தி­ருத்­தங்கள் ஏற்­ப­டுத்­து­வது தொடர்பில் கலந்துரை­யா­டப்­பட்டு வரு­கி­றது என்ற தவ­றான நம்­பிக்­கையை நோக்கி குழு­வையும், தாம் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­வ­தாகக் கூறும் முஸ்லிம் சமூ­கத்­தையும் உலமா சபை வழி­ந­டத்­தி­யி­ருக்­க­லா­மென்ற சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றது.

ரிஸ்வி முப்­தியின் இக் கூற்­றுகள், இது தொடர்பில் குழு மேற்­கொண்ட முயற்சிகளுக்குத் தீங்­கி­ழைப்­ப­தா­க­வுள்­ளது.

இச் சமீ­பத்­திய கூற்று, அவர்கள் முன்பு கூறி­ய­மைக்கு எதி­ரா­கவும், தனியார் சட்ட சீர்திருத்­தங்­க­ளுக்கு உலமா சபையின் அர்ப்­ப­ணிப்பு உண்­மை­யா­னதா என்ற சந்தேகத்தை ஏற்­ப­டுத்­து­கின்­ற­தா­கவும் இருக்­கின்­றது. பாதிக்­கப்­பட்ட பெண்­களின் பார்­வைகள் எத­னையும் பிர­தி­ப­லிக்­காத முப்­தியின் கருத்­து­களால், நாம் மிகுந்த மன வ­ருத்­த­ம­டைந்­துள்ளோம்.

முஸ்லிம் தனியார் சட்ட சீர்­தி­ருத்­தத்­தினை ஆத­ரிப்­ப­வர்கள் மீதான தாக்­கு­தல்­களை, குறிப்­பாக தனியார் சட்டம் மற்றும் காதிமார் சபை (குவாஸி) அமைப்­பினால் தமது அடிப்­படை உரி­மைகள் மறுக்­கப்­பட்­டோ­ருக்­காகப் போராடும் முஸ்லிம் பெண்கள் மீதான தாக்­கு­தல்­களை நியா­யப்­ப­டுத்த, சட்ட திருத்தம் மீதான உலமா சபை மற்றும் ஏனைய இஸ்­லா­மிய குழுக்­களின் நிலைப்­பா­டா­னது சமீப காலத்திற் பயன்­ப­டுத்­தப்­பட்­டது என்­பதை எமது அமைப்பு சுட்­டிக்­காட்ட விரும்­பு­கி­றது.

இந்­நி­லையைக் கருத்திற் கொண்டு, அரசு இதிற் தலை­யிட்டு, 18 வயதை எல்லாக் குடி­மக்­க­ளுக்­கு­மான திரு­ம­ணத்­துக்குரிய குறைந்­த­பட்ச வய­தாக அறி­வித்தல், அரச ஊதியம் கிடைக்கும் பதவிகள் பெண்களுக்குக் கிடைக்கும் நிலையினை உறுதிப்படுத்தல் போன்ற பல்வேறு அடிப்படையான சமரசத்துக்கு அப்பாற்பட்ட விடயங்கள் தொடர்பில் சீர்திருத்தம் ஏற்படுத்த வேண்டும் என எமது அமைப்பு வேண்டுகோள் விடுக்கின்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்