வாள் வெட்டு குழு உறுப்பினரின் சொகுசு கார், பூசகர் வீட்டிலிருந்து மீட்பு

🕔 March 26, 2017
– பாறுக் ஷிஹான்-

யாழ்ப்பாண மாவட்டத்தில்  சமூக விரோத செயல்களில் ஈடுபடும் முக்கிய நபர் ஒருவரின் அடையாளப்படுத்தப்பட்ட சொகுசு கார் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த நபர் அண்மைக்காலங்களில் இப்பகுதிகளில் இடம்பெற்ற வாள் வெட்டுக்களில் முக்கிய சந்தேக  நபராக விளங்குகின்றார்.

கொக்குவில் பகுதி பூசகர் ஒருவரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த கார் மீட்கப்பட்டுள்ளது.

சுமார் 65 லட்சம் ரூபாய் மதிக்கத்தக்க அவுடி(AUDI) ரக  மேற்படி காரினை, பூசகரின் வீட்டில் மறைத்து வைத்து விட்டு, சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளார் என பொலிஸார் கூறினர்.

தற்போது மீட்கப்பட்ட கார் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Comments