மரண வீட்டில் மோதல்; பெண் உட்பட ஏழு பேர் காயம்

🕔 March 20, 2017

ரண வீடொன்றில் ஏற்பட்ட மோதலில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உட்பட ஏழு பேர் காயமடைந்தனர்.

மட்டக்களப்பு – ஆரயம்பதி பிரதேசத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மரணமடைந்த பெண் ஒருவரின் பிரேதம் வைக்கப்பட்டிருந்த வீட்டில் , மரணித்தவரின் மகன்கள் மற்றும் பேரப் பிள்ளைகளே இவ்வாறு மோதலில் ஈடுபட்டனர்.

குறித்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, ஒரு தரப்பினர் கூறியுள்ளனர். இதன்போது ஏற்பட்ட  வாய்த்தர்க்கம் மோதலாக மாறியுள்ளது. இந்த மோதலில் கூரிய ஆயுதத்தால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இதேவேளை, காயமடைந்தவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.

மற்றையவர்கள் சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Comments