அரசாங்கத்தில் இணையுமாறு சமலுக்கு அழைப்பு; பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் தெரிவிப்பு

🕔 March 12, 2017

ற்போதை அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த சகோதரரும், முன்னை நாள் சபாநாயகருமான சமல் ராஜபக்ஷ, தற்போது ஒன்றிணைந்த எதிரணி சார்பாக செயற்பட்டு வருகின்றார்.

இந்த நிலையில் ஆட்சியாளர்களுக்கும், சமல் ராஜபக்ஷவுக்குமிடையில், பேச்சுகள் நடந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், அரசாங்கத்துடன் சமல் இணைகின்றமை தொடர்பில், இறுதித் தீர்மானங்கள் எவையும், இதுவரை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

Comments