நாடு முழுவதும் நடத்தப்பட்ட பாரிய திடீர் சோதனை நடவடிக்கையில் 1246 பேர் கைது

🕔 March 12, 2017

பொலிஸார் நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு தொடக்கம், 05 மணி நேரம் நடத்திய திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது, 1,246 பேர் கைது செய்யப்பட்டனர் என, பொலிஸ் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான பிரயந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை நள்ளிரவு 11.00 மணி முதல், சனிக்கிழமை அதிகாலை 4.00 மணி வரையிலான 05 மணி நேர நடவடிக்கையின்போதே, இவர்கள் கைதாகினர்.

கைது செய்யப்பட்டவர்களில் குற்றச் செயல்களைப் புரிந்த 110 பேரும், குற்றச் செயல்கள் தொடர்பில் தேடப்பட்ட 109 பேரும் அடங்குகின்றனர் என்று பிரதி பொலிஸ் மா அதிபர் பிரயந்த ஜயக்கொடி கூறினார்.

மேலும், கைது செய்யப்பட்டவர்களில் 71 பேர் போதைப் பொருட்களைத் தம்வசம் வைத்திருந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, பாரிய வீதிப் போக்குவரத்துக் குற்றங்களைப் புரிந்த 307 பேரும், போதையில் வாகனத்தைச் செலுத்திய 76 பேரும் கைது செய்யப்பட்டோரில் அடங்குவர் என்றும் பொலிஸ் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

மேற்படி நடவடிக்கையானது, நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பாரிய திடீர் சோதனை நடவடிக்கைகளில் ஒன்றாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்