ஹசனலி கலந்து கொள்ளும், உண்மை காண் பயணம்; நாளை பொத்துவிலில்

🕔 March 9, 2017

– எஸ். அஷ்ரப்கான் –

முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலி கலந்து கொள்ளும் ‘உண்மை காண் பயணத்தின்’ 02 வது பொதுக் கூட்டம் நாளை வெள்ளிக்கிழமை மாலை 05 மணியளவில் பொத்துவில் ‘மைலன்’ பழைய திரையரங்கம் முன்பாக நடைபெறவுள்ளது.

பொத்துவில் பிரதேச சபை முன்னாள் பிரதி தவிசாளர் ஏ.எம்.எம். தாஜுதீன் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பொதுக் கூட்டத்தில், மு.கா.வின் உயர் பீட உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம். அன்ஸில் (அட்டாளைச்சேனை பிரதேச  சபை முன்னாள் தவிசாளர்) மற்றும் எம்.ஏ.எம். தாஹிர் (நிந்தவூர் பிரதேச சபை முன்னாள் தவிசாளர்) ஆகியோர்கள் உட்பட மு.கா.வின் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

மு.கா.வின் தலைமை சமூகத்துக்கும், உண்மையினைச் சார்ந்து நிற்போருக்கும் எதிராக செய்த அநீதிகள் குறித்து, இக் கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்