வரட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம்

🕔 February 17, 2017

Maithiri - 011ரட்சியினால் நெற்செய்கை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாதாந்தம் 10 ஆயிரம் ரூபாவினை நிவாரண உதவியாக வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார்.

விவசாய அமைச்சின் அதிகாரிகளுடன் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போதே, ஜனாதிபதி இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.

இதேவேளை, தொடர் வரட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தொடர்பான தகவல்களை சேகரிக்கும் பொருட்டு குழுவொன்றினை நியமிக்குமாறும், இதன்போது ஜனாதிபதி கூறினார்.

மார்ச் மாதம் இறுதி முதல், சிறுபோகம் ஆரம்பிக்கும் வரை, இந்த நிவாரண உதவித் தொகையினை வழங்குமாறும் ஜனாதிபதி இதன்போது அறிவுறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Comments