வேற்றுக் கிரகவாசியின் தோற்றத்துடன், ஒற்றைக் கண் ஆடு: கேகாலையில் அதியசம்

🕔 February 17, 2017

Sheep - 011ற்றைக் கண்ணையுடைய ஆட்டுக் குட்டியொன்று கேகாலையில் பிறந்துள்ளது.

கேகாலை – கருந்தப்பனை என்ற இடத்தில் இந்த ஆட்டுக்குட்டி நேற்று வியாழக்கிழமை பிறந்ததாகக் கூறப்படுகிறது.

குறித்த பகுதியில், ஆடு ஒன்று – இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளது. அவற்றில் ஒரு ஆட்டுக்குட்டி ஒற்றைக்கண்ணுடன் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வேற்றுக் கிரகவாசிகள் என நம்பப்படும் உயிரினத்தின் தோற்றத்தை, இந்த ஆடு கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த வருடம், யானையின் தோற்றத்துடன் பன்றிக் குட்டியொன்று பிறந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தமை இங்கு நினைவு கொள்ளத்தக்கது.

அண்மைக்காலமாக இவ்வாறான அதிசயங்களுடன் விலங்குகள் பிறக்கின்ற செய்திகளை காணக் கூடியதாக உள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்