கிழக்கு முதலமைச்சர், அரசியலுக்காக கல்வியை சீரழிக்கிறார்: ஜெயந்தியாய பாடசாலை பெற்றோர் குற்றச்சாட்டு

🕔 February 13, 2017

Subair - 1111– எம்.ஜே.எம். சஜீத் –

ட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்திற்குட்பட்ட புனான – ஜெயந்தியாய அஹமட் ஹிறாஸ் வித்தியாலய ஆசிரியர்கள், கிழக்கு மாகாண முதலமைச்சரினால் இடமாற்றம் செய்யப்படுவதனால்  அப்பாடசாலைக்குச் செல்லும் ஏழை மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக, மாணவர்களின் பெற்றோர் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிரிடம் விசனம் தெரிவித்தனர்.

இப்பாடசாலையிலிருந்து எந்தவொரு பதிலீடுமின்றி  03 ஆசிரியர்களை கிழக்கு மாகாண முதலமைச்சர் இடமாற்றம் செய்துள்ளார். அதனால் இப்பாடசாலையில் கற்பிப்பதற்கு போதிய ஆசிரியர்கள் இல்லாமலுள்ளது எனவும், பெற்றோர் கூறினர்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிரின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட தளபாடங்கள் கையளிக்கும் நிகழ்வு, இன்று திங்கட்கிழமை ஜெயந்தியாய அஹமட் ஹிறாஸ் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இதன்போதே, மாகாணசபை உறுப்பினரிடம் மேற்கண்ட விடயங்களை பெற்றோர் சுட்டிக்காட்டினர்.

சுமார் 140 மாணவர்கள் கல்வி பயிலும் இப்பாடசாலையில், 03ஆசிரியர்கள் மாத்திரமே உள்ளனர் என்றும், அதிபரின் முயற்சியினாலே இப்பாடசாலை நடவடிக்கைகள் முன்னெடுத்துச் செல்லப்படுவதாகவும் அப்பிரதேச மக்கள் கிழக்கு மாகாண சபை உறு்பபினர் எம்.எஸ் சுபையிரிடம் முறையிட்டனர்.

இப்பாடசாலையில் நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் முதலமைச்சரின் அரசியல் அதிகாரத்தினைப் பயன்படுத்தி இடமாற்றம் பெற்றுச் செல்வதாகவும், இதுதொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சரை பலமுறை சந்தித்தும் எவ்விதமான தீர்வுகளும் கிடைக்கவில்லை எனவும் பெற்றோர் கவலை தெரிவித்தனர்.

ஏழை மக்களின் கல்வி தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சரை பலமுறை சந்தித்தும் எந்தப்பலனும் கிடைக்கவில்லை என, ஜெயந்தியாய மாதர் சங்கத்தலைவி ஏ.எல். ஹிதாயத்தும்மா கவலையோடு தெரிவித்தார்.Subair - 123

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்