தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

🕔 July 8, 2015

SEUSL - 01
– எம்.வை. அமீர் –

தெ
ன்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்துக்கு தெரிவாகியுள்ள மாணவர்களுக்களை வரவேற்கும் நிகழ்வு, பிரயோக விஞ்ஞான பீட கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை  இடம்பெற்றது.

பீடாதிபதி கலாநிதி சபீனா இம்தியாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திணைக்களங்களின் தலைவர்களான ஏ.என். அஹமட், கலாநிதி யூ.எல். செயினுடீன் மற்றும் கலாநிதி எச்.எம்.எம்.நளீர், மாணவர்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் கே. கோமதிராஜ், சிரேஷ்ட உதவிப் பதிவாளர் பீ. முபீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்துக்கு இம்முறை (2013/2014 ஆம் ஆண்டுக்கு) 235 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.SEUSL - 02SEUSL - 03

Comments

புதிது பேஸ்புக் பக்கம்