கருணா அம்மான் தலைமையில் புதிய கட்சி

🕔 February 11, 2017

Karuna amman - 011ருணா அம்மான் என அழைக்கப்படும் முன்னாள் அமைச்சரும், விடுதலைப் புலிகள் அமைப்பின் தளபதியுமான விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் புதிய அரசியல் கட்சி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி எனும் இந்த கட்சியின்  அங்குரார்ப்பண நிகழ்வு, இன்று சனிக்கிழமை, மட்டக்களப்பு மத்திய வீதியில் உள்ள போக்கஸ் விடுதியில் நடைபெற்றது.

மட்டக்களப்பில் இயங்கிவரும் நாம் திராவிடர் கட்சியும், இதன்போது தமது ஆதரவைப் கருணா அம்மானின் புதிய கட்சிக்கு வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விநாயகமூர்த்தி முரளிதரனின் தலைமையில் நடைபெற்ற  மேற்படி அங்குரார்ப்பண நிகழ்வில், புதிய கட்சியின் பொதுச்செயலாளராக மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் அமைப்பின் தலைவர் வி. கமலதாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சினை பதிவுசெய்யும் நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என்றும், மட்டக்களப்பில் கட்சியின் அலுவலகம் திறக்கப்படும் என்றும் இதன்போதுதெரிவிக்கப்பட்டது.

Comments