2004 இல் நடந்த கதை சொன்னார் ஹக்கீம்: உயர்பீட கூட்டத்தில் குற்றத்தையும் ஏற்றுக் கொண்டார்

🕔 February 5, 2017

hakeem-0991– அஹமட் –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்களில் ஒன்றினை, நேற்று சனிக்கிழமை நடைபெற்ற கட்சியின் உயர் பீடக் கூட்டத்தில் அவர் ஏற்றுக் கொண்டார் என, உயர்பீட உறுப்பினர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

பெண் ஒருவருடன் சுமார் 12 வருடங்களுக்கு முன்னர் தொடர்பு வைத்திருந்தமை தொடர்பான குற்றச்சாட்டினையே மு.கா. தலைவர் உயர்பீடக் கூட்டத்தில் ஏற்றுக் கொண்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.

“2004ஆம் ஆண்டு என் வாழ்க்கையில் ஒரு தவறு நடந்தது. நானும் மனிதன்தான், எனக்கும் பலவீனங்கள் உள்ளன. அந்தப் பிரச்சினை நடந்த இரண்டு வருடங்கள் நானும் என் குடும்பமும் மிகவும் பாதிக்கப்பட்டோம். அப்போது, எனது இரண்டு பெண் பிள்ளைகளின் எதிர்காலத்தினை நினைத்து நான் மிகவும் கவலையடைந்தேன்” என்று கூறி, மு.கா. தலைவர் ஹக்கீம், தனது குற்றத்தினை, உயர்பீட உறுப்பினர்கள் முன்னிலையில் ஏற்றுக் கொண்டார் என்று, உயர்பீட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

ஆயினும், இவ்வாறான குற்றத்தினைப் புரிந்ததாக ஒப்புதல் வாக்கு மூலம் வழங்கிய மு.கா. தலைவருக்கு, இஸ்லாமிய சட்டப்படி வழங்க வேண்டிய தண்டனை குறித்தோ, அல்லது குற்றத்தினைப் புரிந்தவர் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலோ, உயர்பீட உறுப்பினர் எதுவும் பேசவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ்வாறானதொரு நிலையில், ஹக்கீமுடைய குற்றங்களை சுட்டிக்காட்டிய பசீர் சேகுதாவூத்தை, மு.கா.வின் தவிசாளர் பதவியிலிருந்து இடைநிறுத்துவதென,  உயர்பீடத்திலுள்ள ஹக்கீம் விசுவாசிகள் தீர்மானமொன்றினை மேற்கொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்