எதிர்கட்சித் தலைவர் உதுமாலெப்பை, பொத்துவில் பெரிய பள்ளிவாயலுக்கு ஜெனரேட்டர் அன்பளிப்பு

🕔 February 3, 2017
Uthumalebbe - 98– எம்.ஜே.எம். சஜீத் –

கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ். உதுமாலெவ்வை, பொத்துவில் பெரிய ஜும்மாப் பள்ளிவாயலுக்கு மின் பிறப்பாக்கி (ஜெனரேட்டர்) வழங்கியதோடு, பொத்துவில் ஜனாஸா நலன்புரி அமைப்பிற்கு 01 லட்சம் ரூபாய் பெறுமதியான உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான காசோலையும் கையளித்தார்.

எதிர்கட்சித் தலைவர் உதுமாலெப்பையின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து இந்த உதவிகள் வழங்கப்பட்டன.

பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.எம். முஸர்ரத் தலமையில் மேற்படி உதவிகளை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது பொத்துவில் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சீ. நஸீல் அஹமட், தேசிய காங்கிரஸின் பொத்துவில் அமைப்பாளரும் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவின் இணைப்பாளருமான ஏ. பதுர்கான், பொத்துவில் பெரிய ஜும்மாப்பள்ளிவாசல் தலைவர், செயலாளர் மற்றும் ஜனாசா நலன்புரி அமைப்பின் தலைவர் மௌலவி கே. அப்துல் அஸீஸ் உள்ளிட்டோரும் வருகை தந்திருந்தனர்.

பொத்துவில் பெரிய ஜும்மாப் பள்ளிவாயலின் நீண்ட காலத் தேவையாக இருந்த மின் பிறப்பாக்கியினை வழங்கி வைத்த, கிழக்கு மாகாண எதிர்க் கட்சித் தலைவர் எம்.எஸ். உதுமாலெவ்வைக்கு, பெரிய பள்ளிவாயல்  செயலாளர் எஸ்.டீ. செய்னூலாப்தீன் இதன்போது நன்றியினைத் தெரிவித்தார்.Uthumalebbe - 97

Comments

புதிது பேஸ்புக் பக்கம்