தலைப்புச் செய்திகள்

மைத்திரிதான் என்னை இழுத்து வந்தார்: மஹிந்த ராஜபக்ஷ, நுகேகொடையில் தெரிவிப்பு

Mahinda - 011ரசியலிருந்து ஓய்வு பெறச் சென்ற தன்னை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே மீண்டும் அரசியலுக்குள் இழுத்து எடுத்தார் என்பதை, அவரிடம் தெரிவித்துகொள்ள விரும்புவதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

‘நீங்கள் தற்போது அரசியலில் இருந்து ஓய்வு பெற முடியாது என மக்கள் கூறியிருந்த போதும், தான் ஓய்வு பெறச் செல்லவிருந்ததாகவும் அவர் மேலும் கூறினார்.

நுகேகொடையில் நேற்று வெள்ளிக்கிழமை ஒன்றிணைந்த எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த, நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;

“துறைமுகங்கள் அரச நிறுவனங்கள் என அனைத்தையும் ஆட்சியாளர்கள் சர்வதேசத்துக்கு விற்பனை செய்ய ஆயத்தமாகியுள்ளனர். மேலும் கொழும்பு நகரில் 08 ஹெக்டேயர் நிலப்பரப்பையும் விற்பனை செய்ய தீர்மானித்துள்ளார்கள். இதனை வாங்குபவர்கள் சற்று அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுகின்றேன்.

இதுபோன்று அரசிடம் கொள்யைடித்த பணத்தில் தொலைக்காட்சி,வானொலி மற்றும் பத்திரிகை நிறுவனங்களை வாங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளார்கள். அரசாங்கத்திடம் கொள்ளையடித்த பணத்தில் எதை வாங்கினாலும் அனைத்தும் பொதுமக்கள் உடமையாக்கப்படும்.

இந்த மக்கள் கூட்டத்தை பார்க்கும் போது நமது தலைவர்களுக்கு எந்தப் பக்கம் இழுத்துக்கொள்ளும் என்று எனக்கு சந்தேகமாக உள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், இனி அரசியலிருந்து ஓய்வு பெறுவோம் என்ற எண்ணத்தோடு, ஜனவரி 09 ஆம் திகதி காலை 06 மணிக்கு ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேறி மெதமுலனவுக்கு சென்றேன். அங்கு என்னிடம் ‘தற்போது நீங்கள் ஓய்வு பெற முடியாது, மீண்டும் நீங்கள் அரசியலைத் தொடர வேண்டும் ” என சொன்னது மக்களாகிய நீங்கள்தான்.

இருந்தபோதும், ஓய்வு பெறச் சென்ற என்றை மீண்டும் இழுத்து எடுத்தது மைத்திரிபாலதான் என்பதை அவருக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

நாட்டை பிளவுப்படுத்தும் நோக்கில் தற்போது புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குகின்றார்கள்.

பயங்கரவாதிகளுக்கு எதிராக பெற்று கொண்ட யுத்த வெற்றியை காட்டிகொடுக்க ஆயத்தமாக உள்ளார்கள்.

இந்த வரலாற்று யுத்த வெற்றியை பாதுகாக்கும் பொறுப்பு இந்த நாட்டு மக்களிடமும், தலைவரிடமும் உள்ளது.

எனவே காட்டி கொடுப்புக்கான புதிய அரசியலமைப்பு பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.

நாட்டின் பொருளாதார நிலைமையை அறிந்து கொண்டுதான், பதவி காலம் முடிவடைவதற்கு முன்னரே ஜனாதிபதி தேர்தலை நடத்தினேன். ஆனால், என்னுடைய சுயநலத்துக்காக நடத்தி, தோல்வியடைந்ததாக கூறுகின்றார்கள்.

சர்வதேச நாடுகளிடம் நான் கடன் பெற்று, நாடு பொருளாதார ரீதியாக பாரிய பின்னடவை எதிர்கொண்டதால்தான், நான் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தேன் என்றால், எதற்காக நாடு கடனில் இருக்கும் போது  ஆட்சிக்கு வந்தீர்கள்.

தற்போதைய தலைவர்கள் இதுபோன்ற விளக்கமற்ற கதைகளைதான் கூறிகொண்டு இருக்கின்றார்கள்.

அரசாங்க நிறுவனங்கள், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை துறைமுகங்கள் ஆகியவற்றை விற்பனை செய்ய ஆயத்தமாக உள்ளார்கள்.

இதுபோன்று கொழும்பு நகரில் 08 ஹெக்டேயர் நிலபரப்பை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளார்கள்.

இந்த அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் அவதானித்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.

துறைமுகங்கள் மற்றும் அரச நிறுவனங்களை வாங்க நினைப்பவர்கள் சற்று அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கின்றோம்.

இதுபோன்று அரசாங்கத்திடம் கொள்ளையிட்ட பணத்தில் தொலைக்காட்சி, வானொலி மற்றும் பத்திரிகை நிறுவனங்களையும், வங்கியில் ஒரு பகுதியையும் கொள்வனவு செய்ய உள்ளார்கள். ஆனால் இவர்களுக்கு ஒன்றை கூற விரும்புகின்றேன்.

அரசாங்கத்திடம் கொள்ளையிட்ட பணத்தில் வாங்கிய அனைத்தும் பொதுமக்களின் உடமையாக்கப்படும் என்பது நிச்சயம்” என்றார்.Mahinda - 0244 Mahinda - 0246