தற்செயலாக விடுக்கப்பட்ட வேண்டுகோளை, மனதில் வைத்து நிறைவேற்றிய ஜனாதிபதிக்கு, மக்கள் நன்றி தெரிவிப்பு

🕔 January 28, 2017

Ambulance - 098 க. கிஷாந்தன் –

கொட்டகலை வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டியொன்றினை வழங்குமாறு, அப்பிரதேச மக்கள் ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகோளினை, சில நாட்களுக்குள் நிறைவேற்றிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு பிரதேச மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நன்றிகளை தெரிவித்தனர்.

கடந்த 21ந் திகதி தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக வானூர்தி மூலம் வருகை தந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, காலநிலை சீர்கேட்டினால் கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி காரியாலய மைதான வளாகத்தில் திடீரென தரையியிறங்கினார்.

வானூர்திகள் தரையிறங்கியமையினைக் கண்ட பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அவ்விடத்தில் கூடினர். அவ்விடத்தில் தறையிறங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, நட்பு ரீதியாக இவர்களுடன் உரையாடினார். இதன்போது மக்களின் குறைநிறையைக் கேட்டறிந்தார்.

இதன்போது, கொட்டக்கலை வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டியொன்றின் தேவை குறித்து ஜனாதிபதிக்கு எடுத்துக் கூறப்பட்டது.

இதனை மனதிற் கொண்ட ஜனாதிபதி, ஒரு வாரத்திற்குள் நவீன முறையிலான புதிய அம்புலன்ஸ் வண்டியினை நேற்று வெள்ளிக்கிழமை வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளித்தார்.

இதற்கு நன்றி கூறும் வகையில் இன்று சனிக்கிழமை இந்த வண்டியினை பொதுமக்கள் சேவைக்காக மக்களிடம் கையளிக்கும் நிகழ்வும், நன்றி நவிலும் நிகழ்வும் கொட்டகலை பிரதேச வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி. சாவித்ரி தலைமையில் நடைபெற்றது.

இதன்போது நுவரெலியா மாவட்ட சுகாதார பிரிவின் முக்கிய அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில், கொட்டகலை பிரதேச குறையினை நிவர்த்தி செய்த ஜனாதிபதிக்கு  கொட்டகலை பிரதேச மக்களுக்கள் நன்றி தெரிவித்தனர்.Ambulance - 099 Ambulance - 097

Comments

புதிது பேஸ்புக் பக்கம்