உலகில் பலம் வாய்ந்த நாடுகளின் பட்டியல் வெளியானது: இஸ்ரேலை பின் தள்ளியது ஈரான்
உலகில் பலம் வாய்ந்த நாடுகளின் பட்டியலை அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ‘தி அமெரிகன் இன்டரஸ்ட்’ (The American Interest) எனும் பத்திரிகை வெளியிட்டுள்ளது. உலகின் சக்தி வாய்ந்த முதல் 08 நாடுகளை ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பத்திரிகை பட்டியலிடும்.
அந்த வகையில் 2017ஆம் ஆண்டுக்கான பட்டியலை, மேற்படி பத்திரிகை வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் இஸ்ரேலை ஈரான் பின் தள்ளியுள்ளமை குறிப்பிடத்தக்கது. உலகில் பலமுள்ள 08 நாடுகளின் பட்டியலில் 08ஆவது இடத்தை இஸ்ரேல் பெற்றுக் கொண்டுள்ள அதேவேளை, ஈரான் 07வது இடத்தினை பெற்றுள்ளது.
அண்டை நாடாான இந்தியாவுக்கு 06ஆம் இடம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பட்டியலில் முதலிடத்தை அமெரிக்கா பெற்றுள்ளது. இரண்டாமிடத்தினை சீனாவும், ஜப்பானும் பகிர்துள்ளன.
04 மற்றும் 05ஆம் இடங்களை ரஷ்யா மற்றும் ஜேர்மனி பெற்றுள்ளன.
மேற்படி பட்டியலில், பிரிட்டிஸ் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் உள்ளடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.