33 ஆயிரம் லீட்டர் டீசலுடன் பவுஸர் புரண்டு விபத்து

🕔 January 26, 2017

Accident - 046– க. கிஷாந்தன் –

ல்லியப்பு சந்திக்கு அருகாமையில் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் டீசல் கொள்கலனொன்று இன்று வியாழக்கிழமை மதியம் விபத்துக்குள்ளானது.

கொழும்பு – கொலனபவ பகுதியிலிருந்து, கொட்டகலையிலுள்ள பெற்றோலிய களஞ்சியசாலைக்கு டீசலை கொண்டுசெல்லும் போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

கட்டுப்பாட்டை இழந்த குறித்த பவுஸர், பிரதான வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியது.

இந்நிலையில் பவுஸரில் இருந்த டீசல் வெளியேறி வீதியில் பரவியுது.

இவ் விபத்தினால் சில மணி நேரம் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. குறித்த பவுஸரில் 33,000 லீட்டர் டீசல் இருந்ததாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.Accident - 045 Accident - 047

Comments