தொடரும் அழை மழை: அம்பாறை மாவட்டத்தின் தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி வருகின்றன

🕔 January 24, 2017

Flood - 22– யூ.கே. காலித்தீன் –

நீண்ட வறட்சியின் பின் பெய்துவரும் தொடர் மழை காரணமாக, அம்பாறை மாவட்டத்தின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் பரவி வருகிறது. குறிப்பாக, மாவட்டத்தின் கரையோர பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில்கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக, கல்முனை மாநாகர சபைக்குட்பட்ட பிரதேசங்களிலுள்ள வீதிகள், அரச காரியாலங்கள் மற்றும் பாடசலைகள் நீரில் மூழ்கியுள்ளன

இந்த அடைமழையினால் சாய்ந்தமருது பிரதேசத்தின் வொலிவோரியன் கிராமத்தில் அமைந்துள்ள எம்.எஸ். காரியப்பர் வித்தியாலய வளாகத்தினுள் வெள்ளம் பரவியுள்ளது.

பாடசாலைக்கு சுற்றுமதில் இல்லாததன் காரணமாக, அருகிலுள்ள பாதைகளில் அமைந்துள்ள வடிகான் நீர், பாடசாலை வளாகத்தினுல் ஊடுருவியமையினாலேயே இந் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதில் குறித்த பாடசாலை சிரமங்களை எதிர்நோக்கியுள்ளது. இந்நிலை தொடருமானால் பாடசாலையை மூடவேண்டியேற்படுமென அதிபர் தெரிவித்தார்.Flood - 33 Flood - 11

Comments