வெளி நாடுகளின் அழுத்தங்களுக்களுக்காக, அரசியலில் இருந்து ஒதுங்கப் போவதில்லை: மஹிந்த தெரிவிப்பு

🕔 January 22, 2017

mahinda-009வ்வளவு பலமிக்க நாடுகள், எத்தனை அழுத்தங்களை கொடுத்தாலும் அரசியலில் இருந்து ஒதுங்கப் போவதில்லை என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவை அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்ளுமாறு வெளிநாடுகள் அழுத்தம் கொடுத்து வருவதாக வெளியாகியிருக்குமு் செய்திகளுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே, இதனை கூறினார்.

நாட்டு மக்களுடனேயே எப்போதும் அரசியலில் ஈடுபட்டு வந்துள்ளேன் என்றும், வெளிநாடுகளின் விருப்பு வெறுப்புகளுக்கு அமைய, தான் அரசியலில் ஈடுபடவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தாலும், எந்த லாப நோக்கமும் இன்றி தன்னுடன் இருக்கும் லட்சக்கணக்கான மக்களின் கோரிக்கைகளை, எந்த வகையிலும் புறந்தள்ள போவதில்லை எனவும் மஹிந்த  தெரிவித்துள்ளார்.

மேலும், தனது அரசியலை நாட்டு மக்களே தீர்மானிப்பார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

பலமிக்க வெளிநாடு ஒன்றின் தூதரகமும், அயல் நாடு ஒன்றின் புலனாய்வுப் பிரிவும், முன்னாள் ஜனாதிபதியை செயற்பாட்டு ரீதியான அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்ளுமாறு அழுத்தம் கொடுத்து வருவதாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்