குடைசாய்ந்து லொறி விபத்து

🕔 January 16, 2017

Accident - 022– க. கிஷாந்தன் –

கினிகத்தேனை கலுகல பகுதியில் பொலித்தீன் மற்றும் காட்போர்ட் வகைகளை ஏற்றிச்சென்ற சிறிய ரக லொறி ஒன்று பிரதான வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.

ஹட்டன் –  கொழும்பு பிரதான வீதியில், இன்று திங்கட்கிழமை மாலை இந்த விபத்து நிகழ்ந்ததாக, கினிகத்தேனை போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் – நோர்வூட் பகுதியிலிருந்து அவிசாவளை நோக்கி பயணிக்கும் போது வாகனத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே, இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் மேலும் கூறினர்.

வாகனத்தின் சாரதியும் மேலும் இருவரும் பயணித்த நிலையில், சாரதி படுங்காயகளுக்குள்ளாகி கினிகத்தேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏனைய இருவரும் காயங்கள் எதுவுமின்றி தப்பியுள்ளனர்.Accident - 011

Comments