தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள்; புத்தகம் வந்ததால் ஹக்கீம், ஹாபிஸ் நஸீர் அதிர்ச்சி

🕔 January 14, 2017

Dharussalam -011– முன்ஸிப் அஹமட் –

மு.காங்கிரசின் தலைமையகம் தாருஸ்ஸலாம், மற்றும் அந்தக் கட்சியின் சொத்துக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மோசடியான நடவடிக்கைகளை வெளிப்படுத்தும் வகையில், புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

‘தாருஸ்ஸலாம் : மறைக்கப்பட்ட மர்மங்கள்’ எனும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தின் பிரதிகள் – முஸ்லிம் காங்கிரசின் உயர் மட்டத்தினருக்கும், சமூகத்திலுள்ள முக்கியஸ்தர்களுக்கும் கிடைக்கச் செய்யப்பட்டுள்ளன.

முஸ்லிம் காங்கிரசின் தலைமையகமாக தாருஸ்ஸலாம் தொடர்பில் மறைக்கப்பட்ட உண்மைகள் பலவற்றினையும், மு.காங்கிரசின் சொத்துக்கள் மற்றும் வருமானத்தில் இடம்பெற்று வரும் மோசடிகள் பலவற்றினையும் சட்ட ரீதியான ஆதாரங்களுடன் வெளிப்படுத்தும் வகையில், இந்தப் புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது.

‘தாருஸ்லலாம் மீட்பு முன்னணி’ எனும் பெயரையுடைய அமைப்பு, இந்தப் புத்தகத்தை வெளியிட்டுள்ளது.

முஸ்லிம் காங்கிரசின் சொத்துக்கள் தொடர்பில்,  மு.காங்கிரசின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாணத்தின் தற்போதைய முதலமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமட், பல்வேறு மோசடிகளை மேற்கொண்டுள்ளார் என்று, இந்தப் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, அவற்றுக்கான ஆதாரங்களும் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மு.காங்கிரஸ் எனும் கட்சியைப் பயன்படுத்தி,  அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் எவ்வாறெல்லாம் முறைகேடான முறையில் சொத்துக்களையும், நிதிகளையும் ஈட்டியுள்ளார் என்பதையும் இந்தப் புத்தகம் அம்பலப்படுத்துகிறது.

இந்தப் புத்தகம் வெளிவந்துள்ளமையினை அடுத்து, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் மற்றும் ஹாபிஸ் நஸீர் உள்ளிட்ட பலர், ஆடிப்போயுள்ளனதாகத் தெரியவருகிறது.

யாரும் கைப்பற்ற முடியாது என, ரஊப் ஹக்கீம் மற்றும் ஹாபிஸ் நஸீர் ஆகியோர் நினைத்துக் கொண்டிருந்த பல முக்கிய ஆவணங்கள், இந்தப் புத்தகத்தில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளமையானது, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு கடுமையான அதிர்ச்சினை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தப் புத்தகம் தொடர்பான முழு விபரமும் ‘புதிது’ செய்தித் தளத்தில் வெளியிடப்படவுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்