உள்ளுராட்சி தேர்தலை தொடர்ந்தும் பிற்போடுவது, விரோதமான செயற்பாடு: மஹிந்த தேசப்பிரிய

🕔 January 10, 2017

Mahinda deshapriya - 034ள்ளூராட்சி தேர்தலை உடன் நடத்தவேண்டும் என்பதே தமது அவா என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலை தொடர்ந்தும் பிற்போடுவதானது ஜனநாயகத்திற்கும் சர்வஜன வாக்குரிமைக்கும் விரோதமானதெனது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்ட விடயங்களைக் கூறினார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்;

“உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிற்போடப்பட்டு வருவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு மீது பல்வேறு விமர்சனங்களும் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆயினும், தேர்தலை நடத்தும் அதிகாரம் எமக்கு வழங்கப்படவில்லை. நாடாளுமன்றத்தின் ஊடாக சம்பந்தப்பட்ட அமைச்சரே அதனைத் தீர்மானிக்க எடுக்கவேண்டும் என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்