ஹனீபா மதனியின் ஏற்பாட்டில், பொத்தானை வருகிறார் ஹக்கீம்

🕔 January 7, 2017

hanifa-mathani-011– றிசாத் ஏ காதர் –

தொல்லியல் திணைக்களத்தினால் எல்லையிடப்பட்டுள்ள பொத்தானை பகுதிக்கு, சனிக்கிழமை காலை, மு.காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் விஜயம் செய்யவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மு.காங்கிரசின் அக்கரைப்பற்று பிரதேச அமைப்பாளரும், அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான எஸ்.எல்.எம். ஹனீபா மதனியின் ஏற்பாட்டில், மு.கா. தலைவர் இன்று பொத்தானைக்கு வருகை தருகிறார்.

பொத்தானை பிரதேசத்திலுள்ள ‘ஆராய்ச்சி மரைக்கார் தைக்கா’வின் பரிபாலனக் குழுவினர், ஹனீபா மதனியிடம் கேட்டுக் கொண்தற்கிணங்க, அமைச்சர் ரஊப் ஹக்கீமுடைய இந்த விஜயத்தினை ஹனீபா மதனி ஏற்பாடு செய்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பொத்தான பிரதேசத்தில் அமைந்துள்ள முஸ்லிம் பெரியார் ஒருவரின் அடக்கஸ்தலம் மற்றும் அதனுடன் இணைந்த பள்ளிவாசல் ஆகியவற்றினை, தொல்லியல் திணைக்களம் கடந்த டிசம்பர் மாதம் 07 ஆம் திகதியிலிருந்து தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

சுமார் 250 வருடங்கள் பழமையான இந்த அடக்கஸ்தலத்தில் அங்குள்ள மக்கள் சமய வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தொல்லியல் திணைக்களத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள, குறித்த அடக்கஸ்தலத்தினையும், பள்ளிவாசலினையும் விடுவித்துத் தருமாறு, அமைச்சர் ரஊப் ஹக்கீமிடம் அங்குள்ள மக்கள், ஹனீபா மதனி ஊடாக வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே, குறித்த இடத்தினை பார்வையிடுவதற்காகவே, இன்றைய தினம் ரஊப் ஹக்கீம் வருகை தருகிறார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்