தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்தும் சுசந்திகா

🕔 December 28, 2016

susanthika-jayasinghe-011லிம்பிக் வெள்ளிப் பதக்க வீராங்கனை சுதந்திகா ஜயசிங்க தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தியத்தலாவ ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் ரஞ்சித் அமரகோன் தெரிவித்துள்ளார்.

டெங்கு தாக்கம் காரணமாக, நேற்று செவ்வாய்கிழமை தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் சுதந்திகா அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், சுசந்திகாவுக்கு ஏற்பட்டிருந்த காய்ச்சல் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆயினும், தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் கூறியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்