இளைஞர் பாராளுமன்ற தேர்தல் இன்று; 334 பிரதேச செயலகங்களில் நடைபெறுகிறது

🕔 December 18, 2016

youth-parliament-022– யூ.கே. காலித்தீன் –

ளைஞர் பாராளுமன்றத்துக்கான தேர்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதிலுமுள்ள  334  பிரதேச செயலகங்களிலும் நடைபெறவுள்ளது.

தேசிய இளைஞர் சேவை சபை, ஸ்ரீ லங்கா இளைஞர் சமூக சம்மேளனம் மற்றும் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சு என்பன இணைந்து இளைஞர்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், ஸ்ரீ லங்கா இளைஞர் சமூக சம்மேளனம் மற்றும் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சு என்பன இணைந்து இளைஞர் பாராளுமன்றத்தினை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேற்படி தேர்தல் காலை 7.00 மணி முதல்  மாலை 4.00 மணிவரையில் நடைபெறும்.

இந்த தேர்தலில் வாக்களிப்பதற்கான உரிமையை நாடு முழுவதிலும் இயங்கும் பதிவு செய்யப்பட்ட 12 ஆயிரத்து 938 இளைஞர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பெற்றுள்ளனர். இவ்வாறு பதிவு செய்யப்பட்ட அமைப்புக்களிலுள்ள சுமார் 05 லட்சம் பேர் வாக்காளர்களாக உள்ளனர்.

நாடு முழுவதிலுமுள்ள 160 தொகுதிகளிலிருந்து இளைஞர் பாராளுமன்றத்துக்கு பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

இப்பாராளுமன்றத்துக்காக 225 பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படுவர்.

இவர்களில் இளைஞர் அமைப்புக்களின் வாக்கினால் 160 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர். அத்துடன், பல்கலைக்கழகம், சட்டக் கல்லூரி, சட்ட பீடம், பாடசாலை மாணவர் தலைவர் (அரசியல் துறைசார்ந்த), விசேட கல்வித் தேவையுடைய மாணவர்கள் மற்றும் இளைஞர் அமைப்புக்கள் தவிர்ந்த ஏனைய அமைப்புக்களில் உள்ள 18 தொடக்கம் 28 வயதெல்லைக்கு உட்பட்டவர்களிடமிருந்து கிடைக்கப் பெறும் விண்ணப்பதாரர்களை நேர்முகப்பரீட்சைக்குட்படுத்தி, அவர்களிலிருந்து 65 பேர் தெரிவு செய்யப்படுவர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்