மஹிந்த போன்ற ஒருவர் இந்த நாட்டை ஆண்டுள்ளார் என்பதை நினைத்து கவலையடைகிறேன்: அமைச்சர் ரவி

🕔 December 15, 2016

Ravi karunanayaka - 013கொழும்பு நகரத்திட்டமிடல், போர்ட் சிட்டி, துறைமுகங்கள் மற்றும் சில நிறுவனங்களை விற்றும், கடன்களை பெற்றும் நாட்டை படுகுழியில் தள்ளியவர் மஹிந்த ராஜபக்ஷதான் என்று  நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இப்படிப்பட்ட ஒருவர் எமது நாட்டை ஆண்டிருக்கின்றார் என்பதை நினைத்து தாம் மிகுந்த கவலையடைவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று வியாழக்கிழமை கலந்து கொண்டபோதே அமைச்சர் இதனைக் கூறினார்.

பல ஊழல்களுடன் தொடர்புடைய ஒருவர் இந்த நாட்டை ஆண்டிருப்தை நினைத்து தாம் மிகுந்த கவலையடைகிறேன். நாட்டின் பொது வளத்தை விற்பனை செய்ததும், வீண்விரயம் செய்ததும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதான். இப்படிப்பட்ட ஒருவர் எமது நாட்டை ஆண்டிருக்கின்றார் என்பதை நினைத்து தாம் மிகுந்த கவலையடைகிறேன் என்றும் அவர் கூறினார்.

கொழும்பு நகரத்திட்டமிடல், போர்ட் சிட்டி, சில நிறுவனங்களை விற்றும், துறைமுகங்களை விற்றும், கடன்களை பெற்றும் நாட்டை படுகுழியில் தள்ளியவர் மஹிந்தா ராஜபக்ஷவேதான்.

துறைமுகங்களை அரசு விற்பனை செய்வதாக மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளிக்கும் முகமாகவே நிதி அமைச்சர் இவ்வாறு கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்