பல்வேறு கேள்விகளுக்கு மத்தியில் கூடுகிறது, மு.கா.வின் உயர்பீடம்

🕔 December 14, 2016

slmc-logo-011ல்வேறு விதமான கேள்விகளுக்கு மத்தியில் முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் இன்று புதன்கிழமை மாலை 5.00 மணிக்கு கட்சியின் தலைமைக் காரியாலயம் தாருஸ்ஸலாமில் நடைபெறவுள்ளது.

கட்சியின் செயலாளர் குறித்த பிரச்சினைக்கு நாளை 15ஆம் திகதிக்கு முன்னர் தீர்வினைக் காண வேண்டும் என, தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில், இந்த உயர்பீடக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் செயலாளர் எம்.ரி. ஹசனலி மற்றும் தவிசாளர் பசீர் சேகுதாவூத் ஆகியோர் கலந்து கொள்வார்களா என்கிற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

எவ்வாறாயினும், செயலாளர் பதவி குறித்த சிக்கலுக்குத் தீர்வினைக் காண்பதற்காகவே, இன்று நடைபெறவுள்ள உயர்பீடக் கூட்டம் நடத்தப்படுவதாக ஒரு கருத்து பரவலாக நிலவி வருகின்றது. இருந்தபோதிலும்,  ஏற்கனவே, செயலாளர் சர்ச்சை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்புவதற்கான கடிதமொன்றினை மு.கா. தலைவர் தயார் செய்து விட்டே, இந்தக் கூட்டத்தினைக் நடத்தவுள்ளார் எனவும், கட்சியின் உள்ளக வட்டாரங்கள் கூறுகின்றன.

எவ்வாறாயினும், கட்சியின் செயலாளர் ஹசனலிக்கு – பொறுப்பு வாய்ந்த செயலாளர் பதவியினை வழங்க வேண்டும் என, கட்சியின் அம்பாறை மாவட்ட மாவட்ட முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளமையும் இங்கு நினைவுகொள்ளத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்