அமைச்சரவையில் மாற்றம்; ஜனவரியில் வருகிறது

🕔 December 11, 2016

Ranil - 0998மைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக வார இறுதி பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சுவிட்சர்லாந்து விஜயத்தின் பின்னர் இந்த மாற்றம் நடைபெறவுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனவரி மாதம் சுவிட்சர்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார்.

இந்த விஜயத்தின் பின்னர் அமைச்சரவையில் நிச்சயமாக மாற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை மாற்றங்கள் குறித்து அரசாங்கத்தின் தலைவர்கள் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.

அமைச்சுக்களினால் ஆற்றப்பட்டுள்ள சேவைகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட உள்ளது.

ராஜாங்க அமைச்சர்களுக்கு ஏற்பட்டுள்ள பிணக்குகளை தீர்ப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட உள்ளது.

செயல் திறனற்ற அமைச்சரவை செயலாளர்களும் நீக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்